Posted by: barthee | August 31, 2009

சிதம்பரக் கல்லூரி

இவ் ஆங்கில வித்தியாசாலை வல்வைப் பெரியாராகிய கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் 1896ல் தொடங்கப் பெற்று ஆலடியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடசாலை தொடங்குவதற்கு முதல்நாள் மாலை சிதம்பரப்பிள்ளை அவர்கள் வல்வையில் உள்ள பெற்றோர்களை நெடிய காட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் ஒரு கூட்டத்திற்கு அழைத்து உருக்கமான சொற்பொழிவாற்றினார். அதில் அவர் ஷதான் ஒரு சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும் ஆங்கிலம் படிக்க ஆசைப்பட்டும் இவ் ஊரில் இந்த வசதி இல்லாததால் பருத்தித்துறைக்கு ஒவ்வொரு நாளும் காலையில் நடந்து சென்று மதிய உணவிற்கு சந்தையில் கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கை இரண்டு சதத்திற்கு வாங்கி சாப்பிட்டு மாலையிலும் நடந்து வந்து மிகவும் கஸ்டத்தோடு ஆங்கிலம் கற்று அரசாங்க வேலையிலும் சேர்ந்ததாகவும் தான் பட்ட கஸ்டம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வூரில் ஆங்கில வித்தியாசாலையை ஆரம்பிப்பதாகவும் அதற்கு ஊரவர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இப்போது அப்பாடசாலை அவர் நினைவாக சிதம்பராக் கல்லூரியாக வளர்ந்திருக்கின்றது

1912ம் ஆண்டு பள்ளிக்கூட வளர்ச்சியினால் இடம்போதாமை காரணமாக ஆலடியிலிருந்து ஊரிக்காட்டுக்கு மாற்றப்பட்டது. சிதம்பரப்பிள்ளை அமரராகி விடவே பாடசாலையின் முகாமைத்துவம் திரு ஞானசேகரப்பிள்ளை தையல்பாகர் அவர்களிடம் வந்து சேர்ந்தது. இவர்களின் மேற்பார்வையில் 1925ம் ஆண்டளவில் திரு வானமலை ஐயங்கார் அவர்கள் (பி.ஏ. சென்னை) அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு திரு கிருஸ்ண ஐயர் (பி.ஏ) அவர்களும் ஆசிரியராகச் சேர்ந்து கொண்டார். பாடசாலை அதிதுரிதமாக வளரத் தொடங்கியதும் வருடம் ஒரு வகுப்பாக உயர்ந்தது. திரு சிவசைலம்ஐயர் (பி.ஏ.சென்னை) திரு பு.க.முத்துக்குமாரசாமி (பி.ஏ.இரங்கூன்) அவர்களும் திரு அரியரத்தினம் உடுப்பிட்டி, திரு இரத்தினம் உடுப்பிட்டி, திரு நடராசா (பி.ஏ) பொலிகண்டி, திரு நடராசா ஊரிக்காடு, திரு ச. சத்தியமூர்த்தி (பி.எஸ்.சி.) திரு ச.வல்லிபரம் (பி.எஸ்.சி.) இவர்களின் சேவையால் பாடசாலையும் வல்வை மக்களும் வளர்ந்தனர். 1948 தொடக்கம் 1960 வரையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண வகுப்பில் சித்தியடைந்த சகல மாணவர்களும் உடனுக்குட்ன அரசசேவையில் சேர்ந்தனர். திரு தையல்பாகர் அவர்களின் மகன் திரு அருள்சுந்தரம் அதிபராக பலகாலம் கடமையாற்றினார். பின்னர் திரு ச.சத்தியமூர்த்தி அவர்களும் அதன் பின்னர் பலகாலம் திரு கோ.செல்வவிநாயகம்  அதன் பின்னர்  திரு யோகச்சந்திரன் அவர்கள் அதிபராக இருந்துள்ளார்கள்.

 அதன் பின்னர்  05.02.2010  முதல் தற்போது வரை திரு.G.கிருஸ்னகுமார் அவர்கள்  அதிபராக இருக்கின்றார்

இக்கல்லூரியில் தொண்டமானாறு பொலிகண்டி, திக்கம், கம்பர்மலை, வல்வெட்டி போன்ற அயல் கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். வல்வையைப் பிறப்பிடமாகவும் யாழ்.நகரில் பிரபல வர்த்தகருமான திரு செ.கந்தசாமிதுரை (கட்டிஅப்பா) தனது தந்தையார் நினைவாக (டாக்டர் வி.கே. செல்லையா) ரூபா 50,000 வைப்புநிதியில் வைத்து அதனால் வரும் வருட வட்டி இரசாயன பாடத்தில் முதன்மையாக வந்து (உயர்தரம்) பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கு அளிக்கும்படி கொடுத்துள்ளார். 1967ம் ஆண்டு இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்கு சிதம்பராக்கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கமும், திருகோணமலை பழைய மாணவர் சங்கமும் வல்வை பொதுமக்களின் சங்கமும் முன்னின்று உதவி புரிந்தன.

பாடசாலையில் உயர்கல்வியைத் தொடர முடியாது விலகிய மாணவர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றைப் பழுதுபார்த்தல் பயிற்சியினை நடாத்துகின்றார்கள். வல்வை கல்வி அபிவிருத்திச்சங்கம் என்ற பெயரில் டாக்டர் எஸ்.ராசேந்திரன் அவர்களும் திரு ரி.யோகசபாதிபிள்ளை அவர்களும் ஒரு லட்சம் ரூபா வரை நன்கொடை அளித்திருந்தனர். கனடா வல்வை நலன்புரிச் சங்கமும் வருடா வருடம் தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது.

(வல்வைநகர் வலைப்பதிவில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டது. நன்றி)

ஆவலர்களிடம் இருந்து தகவல்கள் புகைப்படங்கள் எதிர்பார்ககப்படுகின்றது.

Advertisements

Responses

  1. நான் யுாஃசிதம்பரக் கல்லுர்ரியின் அதிபராக 5.2.2010 ல் பொறுப்பேற்றுள்ளேன் பாடசாலையை பழையநிலைக்கு உயர்த்த உங்களின் ஒன“றுபட்ட ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: