Posted by: barthee | August 31, 2009

முத்துமாரி அம்மன் கோவில்

1130078ஆரிய சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணம் வந்த காலமாகிய 1048ம் ஆண்டுக்குப் பின்னும் பறங்கியர் யாழ்ப்பாணம் வந்த காலம் ஆகிய 1617ம் ஆண்டுக்கு முன்னும் இக் கோயில் உண்டாகியிருக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார்கள். முதலில் ஒரு கொட்டகையாய் இருந்து காலாகாலங்களில் சாந்துக் கட்டிடமாய் வளர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். தற்போது ஈராக், ஈரான் என்று அழைக்கப்படும் பழைய சுமேதிய நாட்டில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சுமேதிய மறவர்களென்ன இவர்களுக்குப் பல நூறு சந்ததிகளுக்குப் பின் வந்த ஆரியச் சக்கரவர்த்திகளாகிய மறவர்களென்ன இவர்களெல்லாம் தங்கள் பாதுகாவல் தெய்வமாய் பெண் தெய்வத்தையே வணங்கி வந்தார்கள். வள்ளுவப் பெருந்தகைக்கு உடன் பிறந்தாளாகக் கூறப்படும் ஒளவையாரும் தாம் பாடிய ஆத்திசூடியில் ஷதாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்று தானே அருளினார். நல்லூர் வீரமா காளி அம்மன், பருத்தித்துறை பத்திரகாளி அம்மன், தொண்டமானாறு வீரமாகாளி அம்மன், இடைக்காடு, மாதகல், அராலி, நயினாதீவு நாகப+~ணியம்மை ஈறாக எங்கும் அம்மன் கோயில்களே உண்டாகி இருக்கின்றன.

muthumariamman

வல்வெட்டித்துறைக்கு கோடியாய் கரையில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் உதவி கேட்டு வந்த வயோதிபமாது தன்னையும் வல்வையில் கொண்டு சென்று இறக்கும் படி கோர அவர்கள் அதன்படி ஏற்றி வந்து வல்வைக் கரையில் இறக்கியதும் வயோதிப மாது மறைந்து விட்டனihம். இது தான் முத்துமாரி அம்மன் கோயில் தோன்றிய வரலாறு எனக் கூறப்படுகின்றது. 1796ல் பெற்ற அரசினர் இடாப்பில் இக்கோயில் காட்டப் பெற்றிருக்கின்றது.01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பர நாதர் முன்னிலையில் இராசிந்தான் முத்துமாரி அம்மன் கோயில் நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயில்களுக்கு மகமை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்து இருக்கின்றார்கள். 1864ல் எழுதப் பெற்ற அரசினர் அறிக்கையிலும் புண்ணிய மணியகாரனால் அம்மன் கோயில் கல்லால் கட்டப் பெற்றதென்னும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் திருவிழாக்கள் நடந்தது எனவும் குறிக்கப் பெற்றிருக்கின்றது. சில ஆண்டுகள் திருமேனியார் வெங்கடாசலம் மணியமாயிருந்து திருப்பணிகளும் செய்திருக்கின்றார்கள். அப்பால் பெ.கதிர் காமத்தம்பி அதன் பிறகு சு.க.தம்பிப்பிள்ளை மணியமாக இருக்கும் போது 1904ம் ஆண்டில் ஒரு தடவை புனராவர்த்தன கும்பாபிN~கம் நடந்திருக்கின்றது. பின்னர் ஆ.நாகமுத்து சு.க.தம்பி;ப்பிள்ளை நா.கனகசுந்தரம், ஆ. வேலுப்பிள்ளை ஆகியோர் மணியமாக இருந்த காலத்தில் தான் எழுந்தருளி முத்துமாரி அம்மன் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.வ.வ. இராமசாமிபிள்ளை 1933ம் ஆண்டு மணியமாக நியமனம் பெற்றவுடன் பழைய கட்டிடங்கள் யாவும் இடிக்கப்பெற்று கற்கட்டிடங்களாகவும் கட்டப் பெற்றன. இங்ஙனமாக (வ.இ.அப்பா) காலத்தில் புதுப்பித்து கட்டப் பெற்றவற்றின் விபரங்களாவன

 

 

1. கர்ப்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் – சி.செல்லத்துரையும் பெண் வள்ளி அம்மாளும்
2. பிள்ளையார் – பொ. தங்கவேலா யுதமும் பெண் இராசரெத்தினமும்
3. முருகையா – சி. ஆனந்தமயிலும் பெண் விசாலாட்சியும்
4. காத்தலிங்கம் – வ.இ.வைத்தியலிங்கமும் பெண் சௌந்தரி அம்மாளும்
5. சண்டிசுவரி – ஆ. செல்லத்துரையும் பெண் தங்கரெத்தினமும்
6. தீர்த்தக்கிணறு – தா.சின்னத் தம்பியும் பெண் தங்ககெண்ணும்
7. மின்வெளிச்ச அறை – சி.வேலும் மயிலும் ஐயர்
8. வசந்த மண்டபம் – வே. வ.சிவப்பிராகசம், மு.விசுவலிங்கம்
9. யாகசாலை – வி.செல்வவிநாயகமும் பெண் விசாலாட்சிப்பிள்ளையும்
10. திருச்சபை – வ.இராமசாமிப்பிள்ளையும் பெண் இராசம்மாளும்
11. மகாமண்டபம், தரிசன மண்டபம் – வல்வைப் பொதுமக்கள்
12. நந்திபலிபீடம் – மா. இராசா

 

இவ்வேலைகள் முடித்து 1935ம் ஆண்ட யுவ வருடம் ஆனி மாதம் 24ம் திகதி வேதாரணியம் சிவஸ்ரீ ச.சோமசுந்தரக்குருக்கள் அவர்களால் சம்புரோட்சனம் ஆகமவிதிப் படி செய்யப்பெற்றது. 1943ம் ஆண்டு மணிக்கோபுரமும் மணியும் வல்வைப் பொதமக்களால் செய்யப்பெற்றன. தேர்முட்டி சேதமடைந்திருந்தமையால் அதை நல்லமுறையில் புதிதாக திரு. சி.வி~;ணுசுந்தரம் அவர்கள் கட்டுவித்தார்கள். ப+ங்காவன மண்டபம் பொதுமக்களால் கட்டப்பெற்றது. 1957ம் ஆண்டில் 12ம் உற்சவக்காரர் கேள்விக்கிணங்க இராசகோபுரம் இடிக்கப்பெற்று கீழ்ப்பகுதி வைரக் கருங்கற்களினால் கட்டப்பெற்று இராஜகோபுர மேல் பகுதியும் நல்ல அலங்கார முறையில் கட்டிமுடிக்கப் பெற்றது. முத்துமாரி அம்மனுக்கு சித்திரத் தேர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததில் ஊரவர்களே பணம் சேகரித்து 1979ம் ஆண்டு வரும் பெருந்திருவிழாவுக்கு முன் அம்மனுக்கு தேர் செய்வித்து முடித்தார்கள். பின்பு பிள்ளையாருக்கும் முருகனுக்கும் 1981ம் ஆண்டு திருவிழாவுக்கு முன் செய்யப் பெற்று விட்டன. இக்கோயில் ப+சைகள் திருவிழாக்கள் எல்லாம் மிகச் சிறப்பாகவும் அலங்காரமாகவும் நடைபெற்று வருகின்றன. தொன்று தொட்டே இக்கோயிலில் சைவக்குருக்கள்களே பிரதம குருக்களாக இருந்து வருகின்றார்கள். 16.01.1963 தொடக்கம் சிவஸ்ரீ சோ. தண்டபாணி தேசிகர் அவர்கள் (ஜே.பி.அகிலஇலங்கை) பிரதம குருக்களாக இருந்து சிறப்பாகவும் பக்தியுடனும் தொண்டாற்றி வருகிறார்கள். 

ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் தேர்முட்டியும், மோர் மடமும்

அம்மன் கோவிலின் ஒருபக்கத்தோற்றம்…

amman-temple

 

அம்மன் கோவில் சித்திரைத்தேர்…

temple_car_festivel

 

தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடும் அம்மனும், பக்தர்களும்…

வல்வை மக்களின் கைவினை திறனையும் கலை ரசணையையும்  காட்டப்படும் இன்னுமொரு அங்கம் இந்த தீர்த்த திருவிழாவில் வைக்கப்படும் அரங்கார வளைவு…

vvt2

 (வல்வைநகர் வலைப் பதிவில் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டது. நன்றி)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: