Posted by: barthee | September 6, 2009

சிவன் கோயில்

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் பேரூரின் புகழை ஓங்கச் செய்து மிளிர்ந்து கொண்டிருப்பது அங்குள்ள சிவன் கோயிலாகும். கோயில்களுடன் தம் பெயரைப் பினைத்து புகழெய்தியவர் மகனார் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வேங்கடாசலப் பிள்ளை. இப்பெரியதம்பியார் சித்திரபானு ஆண்டு மார்கழித்திங்கள் 6ம் நாள் (19.12.1822) வல்வையம் பதியில் பிறந்தார்.

 இவர் தந்தையார் வேலாயுதர் திருமேனியார் வல்வையம்பதியின் திருசிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்குத் தருமகர்த்தாவாக இருந்து அதனை வேறு சில பெரியார்களிடம் ஒப்படைத்து, வல்வை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தருமகர்த்தாவாக ஆயினார். இத்திருமேனியார் சிவபதமெய்தவே இவர் தமையன் மகன் சங்கரியார் தருமகர்த்தாவாயினர். இச்சங்கரியாரே அம்மன் கோயிலில் இப்போதுள்ள (பழமை வாய்ந்த) சப்பரத்தைச் செய்வித்தவர். திருமேனியார் பெரியதம்பியார் இப்போது உள்ள சுற்று மதிலையும் அமைத்தார்.

அம்மன் கோயில் நடாத்தி வருங்காலத்தில் ஒருநாள் திருமேனியார் தமது மகன் பெரியதம்பியார் கனவில் தோன்றி சிவனுக்கு கோயிலெடுக்கும்படி பணித்தார். பெரியதம்பியார் தமக்குப் பரம்பரையாக வந்த தோட்டங்கள் வயல்களைத் திருத்தி பயிரிட்டும் புதிய பல காணிகளை விலைக்கு வாங்கியும் செல்வத்தைப் பெருக்கினார். பன்னிரெண்டு கப்பல்கள் அமைத்து கடல் வணிகஞ் செய்து டிபரு வணிகப்பிரபு ஆகினார். முதன் முதலாக பெரியவர் அம்மன் கோயிலுக்குத் தெற்கேயுள்ள 60 பரப்பு காணியை விலைக்கு வாங்கினார். இக்காணி கல் நிரம்பியும், கரடுமுரடானதாயும், பற்றையும் செடிகளும் நிரம்பியதாயும் இருந்தது. பெரியவர் அம்மன் கோயிலுக்கு தென்கிழக்கேயுள்ள மடத்தில் இருந்து கொண்டு மேற்படி காணியை துப்புரவு செய்து கொண்டு அருள்மிகு வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கும் கோயில் கட்டுவதற்காக 1867ம் ஆண்டு அத்திவாரம் இடுதலாகிய சங்கத்தாபனத்தை செய்வித்தார்.

சிறந்த சிற்பிகள் பலவகைக் கம்பியர் இந்தியாவிலிருந்து வந்து கோயில் வேலைகள இடம்  பெறச் செய்தனர். அக்காலத்தில் பிரபுவாயிருந்த விசுவநாதர் என்னும் பெரியார் காசிக்குச் சென்று அங்கிருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.

புனராவர்த்தன சம்புரோட்சண கும்பாபிஷேகம் பிலவங்க வருடம் வைகாசி மாதம் 28ம் திகதியான 11.06.1967ல் வெகுசிறப்பாக பக்தி சிரத்தையுடன் நடந்தேறியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முன்னால் பெரும் பெரும் தெருவை இணைக்கும் சிவபுர வீதி திறக்கப்பட்டது.

அதற்கு அதை அண்டிய மக்கள் தங்கள் நிலத்தை அன்பு உபகாரம் செய்தார்கள். வசந்தமண்டபம் வாசலுக்குத் தெற்கேயுள்ள பகுதியையும் அம்மன் வாசலையும் இணைத்து இரண்டாம் வீதியை பெரியார் வி.சுப்பிரமணியம், எஸ்.எஸ். சண்முகம் இருவரும் நல்லமுறையில் மூடிக்கட்டிய திருப்பணியை 1970ம் ஆண்டில் நிறைவேற்றினார்கள். திரு மா.குமாரசாமி அவர்கள் ஆறுமுகசுவாமி விக்கிரத்தையும் வள்ளி தெய்வானை விக்கிரகங்களையும் பஞ்ச லோகத்தில் அழகாக செய்வித்து நடராஜர் மண்டபத்தில் 1977ம் ஆண்டுத் தைப்பூசதினத்தில் ஆகமவிதிப்படி பிரதிட்டை செய்தலாகிய திருப்பணியை நிறைவேற்றினார்.

வல்வெட்டிப் பெருமக்கள் சிவனுக்கு அழகுற சித்திரத் தேரை செய்வித்தார்கள். அவர்கள் தான் தேர்த்திருவிழாவை வருடாவருடம் யாழ்குடாநாட்டின், தென் இந்தியாவின் பிரபல நாதஸ்வர இன்னிசை விற்பனர்களுடன் பெரும் செலவுடன் நடாத்துகிறார்கள். பெரியார் எஸ். வைரமுத்து எம்பெருமானுக்கு வெள்ளி இடபவாகனம் சிறந்த முறையில் அமைத்து உள்ளார்.

திரு கார்வண்ணசாமி அவர்கள் தனது உபயமாக ஐம்பொனிலான மகாவிஷ்ணு விக்கிரகத்தையும் திரு கே.இரத்தினசிங்கம் அவர்கள் சரஸ்வதியையும் பிரதி~;டை செய்து உள்ளார்கள். வல்வை சிவன் கோயில்

 

குரு பரம்பரை

குரு பரம்பரை முதலாவது கும்பாபிஷேகம் 1883ம் ஆண்டு சுபானுவருடம் வைகாசி 27ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை அக்காலத்தில் பிரசித்தி பெற்ற குமாரசாமிகுருக்கள் நடாத்தி வைத்தார். அன்று தொடக்கம் பருத்தித்துறையைச் சேர்ந்த சண்முகக்குருக்கள் அவர்கள் பூசைகளை நடாத்தி வந்தார்கள். 1908ம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியில் ஜனனமும், கோப்பாயில் வாசம் செய்தவரும் ஆரியதிராவிட மொழியில் திறமை உடையவரும் கிரியா விற்பன்னரும், குரு இலட்சணம் நிறைந்தவருமான கார்த்திகேசுக்குருக்கள் அவர்கள் அக்கால எஜமான் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் ப+சை உற்சவம் பிரதிஸ்டை முதலியவற்றைச் செய்து வந்தார். இவருடைய காலத்தில் 1919ம் ஆண்டு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் இவருடைய சிறிய தந்தையார் இராமலிங்க குருக்கள் (மாப்பிள்ளைக்குருக்கள்) இவருடைய விருப்பப்பழ பிரதான ஆசாரியாராக இருந்து கும்பாபிஷேகம் செய்தார். அதன்மேல் இவருடைய் மகன் நீலகண்டக்குருக்கள் (சின்னப்பாக்குருக்கள்) இவருடன் கூட இருந்து பூசைகளை நடாத்தி வந்தார்கள். 1930ல் கார்த்திகேசுக்குருக்கள் இறைவனடி சேர்ந்தார். அதன் மேல் நீலகண்டக்குருக்களே பிரதான ஆசாரியராக இருந்து கோயில் பூஜா கருமங்களை நடாத்தி வந்தார். இவருடன் இவரது மகன் பரமேசுவரக்குருக்கள் 1942ம் ஆண்டு உதவியாக இருந்து பூஜைகளைச் செய்து வந்தார். 1954ம் ஆண்டு நீலகண்டக் குருக்கள் இறைவனடி சேர்ந்தார். தற்போது அவரின் மூத்தமகன் மனோகரக்குருக்கள் நடாத்தி வந்தார் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: