Posted by: barthee | September 6, 2009

நெடியகாடு திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோயில்

nediyakadu_temple

19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப் பெற்ற ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதைய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப் பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்த சில காலத்திற்குள் வேதாரணியத்தில் இருந்து கணபதி ஐயர் என்ற பெயருடைய ஒரு சைவக் குருக்களை அழைத்து வந்து பூஜைகள் செய்வித்து வந்தாரெனத் தெரிய வருகிறது.

பூஜைகள் சிவஸ்ரீ தியாகையர் அவர்களாலும் நடத்தப் பெற்று வந்தன.அக்காலங்களில் கப்பல் வாணிபம் தொடங்கப் பெற்று செல்வனே நடந்து வந்ததால் கப்பற்தொழில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் மகமைகள் வசூலிக்கப் பெற்று கோயிலுக்கு சேர்க்கப் பெற்று வந்தன.

01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கே.கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதப் பெற்ற உறுதியாலும் மகமை தொகையில் என்ன விழுக்காடு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற விபரம் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இவ்வுறுதிக்ள ஊரிலுள்ள பல பெரியார்கள் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். மகமைகள் வசூலிப்பதும் செலவு செய்வதும் பெரியவர் திருமேனியார் வெங்கடாசல பிள்ளை உட்பட ஐவர் கொண்ட ஒரு குழுவினரிடம் ஒப்படைக்கப் பெற்றது. அப்போது பிள்ளையார் கோயிலுக்கு ஆறுமுகம் முருகுப்பிள்ளை என்னும் பெரியார் மணியமாயிருந்தார்.

1867ம் ஆண்டு சிவன்கோயில் சங்குத்தாபனம் செய்யப் பெற்ற இரண்டு ஆண்டுகளில் திரு. வெங்கடாசலம் பிள்ளை சிவன் கோயில் திருப்பணியோடு ஒன்றி விட்டமையால் அவர் பிற கோயில்களின் வேலைகளில் இருந்து விலகி விட்டார். இக்கால கட்டத்தில் கந்தக் குட்டியார் வேலுப்பிள்ளை என்னும் சைவஆசாரசீலர் பிள்ளையார் கோயில் மேற்பார்வையாளரானார். இவர் பிள்ளையாரை முடிந்த வரை ஆகமவிதிப்படி அமைவாகக் கட்டப்பெற்ற கோயிலில் எழுந்தருளச் செய்ய வேண்டு மென உறுதி பூண்டார். சிறிது சிறிதாக மூலஸ்தானம் தம்ப மண்டபம், மதில் முதலியவை கட்டி பிள்ளையாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து 1884ல் பிரதிட்டா அபிஷேகம் செய்வித்தார்கள். இவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமையால் தன் சகோதரி மகளின் கணவர் சண்முகம் பிள்ளையை தன்னுடைய திருப்பணி வேலைகளில் சேர்த்துக் கொண்டார்கள் கொடித்தம்பம் நிறுத்தித்தேரும் செய்வித்து 1892 – 1912ம் ஆண்டுக்கிடையில் வருடாந்தர பெருந்திருவிழாவையும் தொடக்கி வைத்தார்கள்.

vvt4

அவர்கள் 1912ம் ஆண்டளவில் கந்தக் குட்டியார் கதிரிப்பிள்ளை நடராசா என்னும் பெரியாரிடம் கோயில் மேற்பார்வையை ஒப்படைத்தார்கள். நடராசா அவர்கள் தம்ப மண்டபத்தையும் கட்டி முடித்தரர்கள். திருச்சிற்றப்பலப்பிள்ளையார். ஊஞ்சல் பராக்குபாக்களைக் கொண்ட ஒரு சிறு நூலையும் 1916ம் ஆண்டு மதுரையில் பதிப்பித்தார்கள்.

1918ம் ஆண்டில் கோயில் பரிபாலனம் இவரின் தமையனார் க.க. அருளம்பலம் அவர்களிடம் சேர்ந்தது.

1930 – 1933ம் ஆண்டுகளில் செல்லையா தில்லையம்பலமும் ஆறுமுகம் விசுவலிங்கமும் ஒருவர் பின் ஒருவராக கோயிலை பரிபாலித்து வந்தார்கள்.

1933 – 1937ம் ஆண்டுகளில் ம.சாம் பசிவம்மணியம் ஆனார். இவர் காலத்தில் சுற்றுமதில் வேலை நடந்தது. அவர் விலகிக் கொள்ள பொ.தங்கவேலாயுதம் அவர்கள் மணியமானார். இவர் காலத்தில் கோபுரத்தின் கீழ் பகுதி திரு கார்த்திகேசு (ஓவசியர்) பெண் சகுந்தலையம்மாவாலும் கட்டி முடிக்கப்பட்டது.

1905ம் ஆண்டளவில் திரு நா.செல்வமாணிக்கம் அவர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோயில் தொண்டில் தம்முடைய முழுச்செயலையும் சிந்தனையும் அர்ப்பணித்தார்கள்.

1950 – 1970ம் ஆண்டுகளில் வல்வை பொருளாதாரத்தில் சிறந்திருந்தது. இச்சிறப்பையும் வளர்ச்சியையும் நன்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். மூலஸ்தானத்தையும் திருச்சபையையும் வள்ளி தெய்வானை சமேதரராக முருகக் கடவுளுக்கும் புதிய கோயில் கட்டப் பெற்றது. நாகதம்பிரான் கோயில் மேலுள்ள பதுமபீடம் விமான வேலையாய் முடிக்கப் பெற்றது. பொது மக்களையும் அப்போதைக்கப் போது கண்டு பேசி பணம் திரட்டும் வேலையில் அயராது உழைத்த பணி திரு நா.செல்லமாணிக்கம் (அப்பா) அவர்களையெ சாரும். இவை யாவும் கவினுறச் செய்யப் பெற்ற பின்பு கும்பாபிஷேகம் 07.06.1970ல் சிறப்புற நடந்தேறியது. அதைச் சிறப்பிக்க திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பு பிரசங்கம் செய்தார்.

கோயிலின் பகுதி திருப்பணி செய்தவர்கள்

 1. கர்ப்பகிரகம்                                                                               ஆ.செல்லத்துரையும் பெண் தங்கரெத்தினமும்
 2. திருச்சபை –
  வ.வ. இராமசாமிப்பிள்ளையும் பிள்ளைகளும்
 3. நிருத்த மண்டபம்
  வ.வ. இராமசாமிப்பிள்ளையும்பிள்ளையும் பெண் இராசம்மாளும், நா.செல்வமாணிக்கமும் பெண் வள்ளி நாயகியும
 4. நாகதம்பிரான் –
  பொன்னம்பலமும் பெண் அன்னப்பிள்ளையும்
 5. 1970ல் புதிதாக கட்டப்பெற்ற முருகையா
  அ. துரைராசாவும் பெண் இராஜேஸ்வரியும், அ.சிற்றம்பலமும் பெண் பார்வதியும
 6. யாகசாலை
  ம.சாம்பசிவமும் பிள்ளைகளும்
 7. வயிரவர்
  திரு சரவண பெருமாள்
 8. வசந்தமண்டபம்
  வே. இராமவேலுப்பிள்ளையும் பெண் இராசரத்தினம்
 9. பூந்தோட்டக்கிணறு, தண்ணீர் தொட்டி –
  செ. காஞ்சிமாவழவேலும் பெண் சௌந்தரியும்
 10. மணிக்கூட்டுக் கோபுரம் –
  க.வயிரமுத்து நாகப+~ணி அம்மாள்
 11. தீர்த்தக்கிணறு –
  அ.மாரி முத்துவும் நாகம்மாளும
 12. மடப்பள்ளிக்கிணறு –
  மு.மா. பாலசிங்கம்
 13. பூங்காவன மண்டபம்
  செ.வி.நடராசா, சி.பரம்சோதி, ஐ.காத்தாமுத்து
 14. 1978ல் கட்டப்பட்ட மோர்மடம்
  தியாகராசா தேவசிகாமணி
 15. இராஜகோபுரம் அடிப்பாகம்
  கார்த்திகேசு ஒவசியர் மேல்பாகம் செ.கந்தசாமி (கட்டி அப்பா) அவர்களும் வல்வை மக்களும்
 16. பஞ்சமுகப்பிள்ளையார் –
  1979ல் பூ.க. முத்துக் குமாரசாமி
 17. தேர்முட்டி –
  அ.சி.விஷ்ணு சுந்தரம் –
 18. வெளிக்கிணறு –
  தா.சண்முகதாஸ்
 19. கிழக்கு வீதிமடம் –
  ஓவசியர் க.பொன்னம்பலம்
 20. நவக்கிரகம் –
  சவுதி அரேபியாவில் தொழில் புரிந்த வல்வை இளைஞர்கள்
 21. வன்னிவிநாயகர் –
  சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: