ஜூலை 27 ல் இடம்பெற்ற கனடா வல்வை மக்களின் ஒன்றுகூடலின் புகைப்பட தொகுப்பு 1.

1

 

ஒன்றுகூடலின் புகைப்பட தொகுப்பு 2.

2

 

நன்றி: வல்வை பிரான்ஸ்.

உதைபந்தாட்டத்தில் மட்டுமல்லாமல் கரப்பந்தாட்டத்திலும் கட்டியண்ணா என்றழைக்கப்படும் திரு.ச.க.தேவசிகாமணி அவர்களின் பெயர் மிகமுக்கியமானதும் பிரபலமானதும் ஆகும்….. தொடர்ந்து படியுங்கள்

நன்றி: வல்வை பிரான்ஸ்.

 

உதயசூரியன் கழக 50 வது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த விளையாட்டு போட்டியும்

Posted by: barthee | January 8, 2012

இலங்கையில் மிக பிரபலமானதும் அதிக வாசகர்களை கொண்டதுமான வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறுபத்திரிகையில் (08.01.2012) வல்வை புளுஸ்கழகத்தின் ஐம்பதாவதுஆண்டு நிறைவுக்காக வெளியிடப்பட்ட பொன்விழா மலரை பற்றிய சிறிய அறிமுகமும் ஆக்கமும் வெளிவந்துள்ளது. எமது உறவுகளுக்கு இதனை நாம் பெருமையுடன் வழங்குகின்றோம்.

Posted by: barthee | April 9, 2011

வல்வை புளுஸ் 50வது வருடம்(1961-2011)
பொன்விழா மலர் வெளியீடு
முக்கியஅறிவித்தல்
வல்வை புளுஸ் விளையாட்டுக கழகம் இலங்கைத்தீவின் விளையாட்டு அரங்கில் மிக ஆழமாக பெயர் பொறித்த கழகமாகும். இந்த ஆண்டு வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 50வது ஆண்டு நிறைவு வருடமாகும். கடந்த 50வருடங்களாக நீலநிற சீருடை அணிந்த வல்வை புளுஸ் வீரர்கள் தாயகத்திலும், புலத்திலும் ஒரு மிகப்பெரிய விளையாட்டுச் சக்தியாக தங்களை நிரூபித்தவாறு விளையாடி வருகிறார்கள். வல்வெட்டித்துறை என்றால் நினைவுக்குவரும் அதன் அடையாளங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகமும் ஒன்றாகும்.
கடந்த 50வருடங்களாக மூன்று தலைமுறை வீரர்கள் வல்வைபுளுஸ் விளையாட்டுக் கழகத்துக்காக மைதானங்களில் விளையாடிவருகிறார்கள். இந்த 50வருடங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும், இன்னும் உயிர்ப்புடன் இயங்கிவரும் அதன் மனோதிடத்துக்கும் பின்னால் ஏராளம் வல்வைபுளுஸ் வீரர்களின் வரலாறு எழுந்துநிற்கிறது. இந்த 50வது வருடத்துநிறைவின்போது வல்வைபுளுஸ் விளையாட்டுக்கழகம் பற்றிய ஒரு மிகப்பெரிய ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த ஆவணம் என்றென்றும் வல்வையர் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமானதாக விளங்கும்.
இந்த பொன்விழா மலரில், வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகத்தில் விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கின்ற அனைத்து வீரர்களின்
1) விபரங்கள் (புகைப்படத்துடன்)
2) விளையாடிய போட்டிகள்
3) படைத்த சாதனைகள்
4) அரிய புகைப்படங்கள்
5) வல்வையின்ன் வீரர்கள் ஏனைய விளையாட்டுத்துறைகளில் படைத்த சாதனைகள்
6) சிறப்பு கட்டுரைகள்
என்பனவற்றை வல்வையில் இருந்தும் புலம்பெயர்தேசத்தில் வல்வையர்வாழும் அனைத்து தேசங்களில் இருந்தும் பெற்று ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாக வருகின்ற யூலை மாதமளவில் வெளியிட உள்ளோம். எனவே
அன்புக்குரிய வல்வை மக்களே !!!
நீங்களோ, உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுடைய நண்பர்களோ இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ, வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்காக உதைபந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி இருந்தால் தயவு செய்து புகைப்படத்துடன் விபரங்களை 30.04.2011 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு கீழ் வரும் email முகவரிக்கு அனுப்பிவைக்கவும்Valvai50@hotmail.co.uk

வல்வை மக்களின் ஒன்றுகூடல் நடைபெறும் இடம்
Downs View Parks, Keele and Sheppard

தொடர்புகளுக்கு:
= வல்வை நலன்புரிச்சங்கம்=
சுரேஸ் 516 843 5687
முரளி 416 418 2734
செல்வம் 416 562 8451

பார்க்கவே மனதுக்கு கஸ்டமாக இருக்கின்றது சில காட்சிகள்.

 உடையவன் இல்லாவிட்டால் ஒரு முளம் கம்மி

என்னும் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

nediyakadu_temple

19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப் பெற்ற ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதைய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப் பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை எழுந்தருளச் செய்த சில காலத்திற்குள் வேதாரணியத்தில் இருந்து கணபதி ஐயர் என்ற பெயருடைய ஒரு சைவக் குருக்களை அழைத்து வந்து பூஜைகள் செய்வித்து வந்தாரெனத் தெரிய வருகிறது.

பூஜைகள் சிவஸ்ரீ தியாகையர் அவர்களாலும் நடத்தப் பெற்று வந்தன.அக்காலங்களில் கப்பல் வாணிபம் தொடங்கப் பெற்று செல்வனே நடந்து வந்ததால் கப்பற்தொழில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் மகமைகள் வசூலிக்கப் பெற்று கோயிலுக்கு சேர்க்கப் பெற்று வந்தன.

01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கே.கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதப் பெற்ற உறுதியாலும் மகமை தொகையில் என்ன விழுக்காடு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்கிற விபரம் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இவ்வுறுதிக்ள ஊரிலுள்ள பல பெரியார்கள் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். மகமைகள் வசூலிப்பதும் செலவு செய்வதும் பெரியவர் திருமேனியார் வெங்கடாசல பிள்ளை உட்பட ஐவர் கொண்ட ஒரு குழுவினரிடம் ஒப்படைக்கப் பெற்றது. அப்போது பிள்ளையார் கோயிலுக்கு ஆறுமுகம் முருகுப்பிள்ளை என்னும் பெரியார் மணியமாயிருந்தார்.

1867ம் ஆண்டு சிவன்கோயில் சங்குத்தாபனம் செய்யப் பெற்ற இரண்டு ஆண்டுகளில் திரு. வெங்கடாசலம் பிள்ளை சிவன் கோயில் திருப்பணியோடு ஒன்றி விட்டமையால் அவர் பிற கோயில்களின் வேலைகளில் இருந்து விலகி விட்டார். இக்கால கட்டத்தில் கந்தக் குட்டியார் வேலுப்பிள்ளை என்னும் சைவஆசாரசீலர் பிள்ளையார் கோயில் மேற்பார்வையாளரானார். இவர் பிள்ளையாரை முடிந்த வரை ஆகமவிதிப்படி அமைவாகக் கட்டப்பெற்ற கோயிலில் எழுந்தருளச் செய்ய வேண்டு மென உறுதி பூண்டார். சிறிது சிறிதாக மூலஸ்தானம் தம்ப மண்டபம், மதில் முதலியவை கட்டி பிள்ளையாரை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து 1884ல் பிரதிட்டா அபிஷேகம் செய்வித்தார்கள். இவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமையால் தன் சகோதரி மகளின் கணவர் சண்முகம் பிள்ளையை தன்னுடைய திருப்பணி வேலைகளில் சேர்த்துக் கொண்டார்கள் கொடித்தம்பம் நிறுத்தித்தேரும் செய்வித்து 1892 – 1912ம் ஆண்டுக்கிடையில் வருடாந்தர பெருந்திருவிழாவையும் தொடக்கி வைத்தார்கள்.

vvt4

அவர்கள் 1912ம் ஆண்டளவில் கந்தக் குட்டியார் கதிரிப்பிள்ளை நடராசா என்னும் பெரியாரிடம் கோயில் மேற்பார்வையை ஒப்படைத்தார்கள். நடராசா அவர்கள் தம்ப மண்டபத்தையும் கட்டி முடித்தரர்கள். திருச்சிற்றப்பலப்பிள்ளையார். ஊஞ்சல் பராக்குபாக்களைக் கொண்ட ஒரு சிறு நூலையும் 1916ம் ஆண்டு மதுரையில் பதிப்பித்தார்கள்.

1918ம் ஆண்டில் கோயில் பரிபாலனம் இவரின் தமையனார் க.க. அருளம்பலம் அவர்களிடம் சேர்ந்தது.

1930 – 1933ம் ஆண்டுகளில் செல்லையா தில்லையம்பலமும் ஆறுமுகம் விசுவலிங்கமும் ஒருவர் பின் ஒருவராக கோயிலை பரிபாலித்து வந்தார்கள்.

1933 – 1937ம் ஆண்டுகளில் ம.சாம் பசிவம்மணியம் ஆனார். இவர் காலத்தில் சுற்றுமதில் வேலை நடந்தது. அவர் விலகிக் கொள்ள பொ.தங்கவேலாயுதம் அவர்கள் மணியமானார். இவர் காலத்தில் கோபுரத்தின் கீழ் பகுதி திரு கார்த்திகேசு (ஓவசியர்) பெண் சகுந்தலையம்மாவாலும் கட்டி முடிக்கப்பட்டது.

1905ம் ஆண்டளவில் திரு நா.செல்வமாணிக்கம் அவர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோயில் தொண்டில் தம்முடைய முழுச்செயலையும் சிந்தனையும் அர்ப்பணித்தார்கள்.

1950 – 1970ம் ஆண்டுகளில் வல்வை பொருளாதாரத்தில் சிறந்திருந்தது. இச்சிறப்பையும் வளர்ச்சியையும் நன்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். மூலஸ்தானத்தையும் திருச்சபையையும் வள்ளி தெய்வானை சமேதரராக முருகக் கடவுளுக்கும் புதிய கோயில் கட்டப் பெற்றது. நாகதம்பிரான் கோயில் மேலுள்ள பதுமபீடம் விமான வேலையாய் முடிக்கப் பெற்றது. பொது மக்களையும் அப்போதைக்கப் போது கண்டு பேசி பணம் திரட்டும் வேலையில் அயராது உழைத்த பணி திரு நா.செல்லமாணிக்கம் (அப்பா) அவர்களையெ சாரும். இவை யாவும் கவினுறச் செய்யப் பெற்ற பின்பு கும்பாபிஷேகம் 07.06.1970ல் சிறப்புற நடந்தேறியது. அதைச் சிறப்பிக்க திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பு பிரசங்கம் செய்தார்.

கோயிலின் பகுதி திருப்பணி செய்தவர்கள்

  1. கர்ப்பகிரகம்                                                                               ஆ.செல்லத்துரையும் பெண் தங்கரெத்தினமும்
  2. திருச்சபை –
    வ.வ. இராமசாமிப்பிள்ளையும் பிள்ளைகளும்
  3. நிருத்த மண்டபம்
    வ.வ. இராமசாமிப்பிள்ளையும்பிள்ளையும் பெண் இராசம்மாளும், நா.செல்வமாணிக்கமும் பெண் வள்ளி நாயகியும
  4. நாகதம்பிரான் –
    பொன்னம்பலமும் பெண் அன்னப்பிள்ளையும்
  5. 1970ல் புதிதாக கட்டப்பெற்ற முருகையா
    அ. துரைராசாவும் பெண் இராஜேஸ்வரியும், அ.சிற்றம்பலமும் பெண் பார்வதியும
  6. யாகசாலை
    ம.சாம்பசிவமும் பிள்ளைகளும்
  7. வயிரவர்
    திரு சரவண பெருமாள்
  8. வசந்தமண்டபம்
    வே. இராமவேலுப்பிள்ளையும் பெண் இராசரத்தினம்
  9. பூந்தோட்டக்கிணறு, தண்ணீர் தொட்டி –
    செ. காஞ்சிமாவழவேலும் பெண் சௌந்தரியும்
  10. மணிக்கூட்டுக் கோபுரம் –
    க.வயிரமுத்து நாகப+~ணி அம்மாள்
  11. தீர்த்தக்கிணறு –
    அ.மாரி முத்துவும் நாகம்மாளும
  12. மடப்பள்ளிக்கிணறு –
    மு.மா. பாலசிங்கம்
  13. பூங்காவன மண்டபம்
    செ.வி.நடராசா, சி.பரம்சோதி, ஐ.காத்தாமுத்து
  14. 1978ல் கட்டப்பட்ட மோர்மடம்
    தியாகராசா தேவசிகாமணி
  15. இராஜகோபுரம் அடிப்பாகம்
    கார்த்திகேசு ஒவசியர் மேல்பாகம் செ.கந்தசாமி (கட்டி அப்பா) அவர்களும் வல்வை மக்களும்
  16. பஞ்சமுகப்பிள்ளையார் –
    1979ல் பூ.க. முத்துக் குமாரசாமி
  17. தேர்முட்டி –
    அ.சி.விஷ்ணு சுந்தரம் –
  18. வெளிக்கிணறு –
    தா.சண்முகதாஸ்
  19. கிழக்கு வீதிமடம் –
    ஓவசியர் க.பொன்னம்பலம்
  20. நவக்கிரகம் –
    சவுதி அரேபியாவில் தொழில் புரிந்த வல்வை இளைஞர்கள்
  21. வன்னிவிநாயகர் –
    சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி

Older Posts »

Categories